அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு. 

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் புறக்கணிக்கப்படுவதால்,அரசின் சலுகை மற்றும்  திட்டங்களை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில், இரண்டாவது வார்டாக  எமனேஸ்வரம் பகுதியில் உள்ள காந்திநகர் உள்ளது.வார்டில் ஆயிரம் ஆதிதிராவிடர் மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 1000 விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன.17 தெருக்களை கொண்ட காந்திநகர் பகுதியில்,  40 வருடத்திற்கு முன்பு நான்கு தெருக்களுக்கு சாலை  வசதி மட்டும் செய்து தரப்பட்டது.பின்னர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, 2 தெருக்களுக்கு  வாறுகால் வசதியும் செய்து தரப்பட்டது.  மீதமுள்ள  தெருக்களுக்கு வாறுகால் மற்றும் சாலை வசதிகள் இதுவரையிலும் செய்து கொடுக்கவில்லை. இதனால் மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால்  குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  நகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் தார் சாலைகள், வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட காந்தி நகரில் அடிப்படை தேவைகளான, குடிநீர் வாறுகால், சாலை வசதிகளை  செய்து கொடுக்காமல்  நகராட்சி நிர்வாகம் புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறித்து கிராம மக்கள் கூறுகையில்”நகராட்சி இரண்டாவது வார்டில் உள்ள காந்திநகர் பகுதியில் ஆதிதிராவிட மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வசிப்பதால் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மறுக்கிறது .முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை மற்றும் வாறுகால் அமைக்கப்படுகிறது .ஆனால் 70 ஆண்டு பழமையான   காந்திநகர்  புறக்கணிக்கப்படுவது.உடனடியாக சாலை மற்றும் வாறுகால் வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனில் வரும் நகராட்சி தேர்தலை புறக்கணிக்கப்படுவதுடன்,தற்போது, அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களையும் புறக்கணிப்போம் என தெரிவித்தனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *