அதிமுக சார்பில் அமைச்சர்கள் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் தேதி கடைபிடித்து வருகிறது இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வரும் அரசியல் கட்சியினருக்கும் சமுதாய அமைப்பில் இருக்கும் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது இதையொட்டி பரமக்குடியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென் மண்டல ஐஜி முருகன் தலைமையில் இராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனம் கண்காணிப்பில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இம்மானுவேல் சேகரனின் குடும்பத்தார் மகள் சுந்தரி பிரபா ராணி, பத்மா, பேரன்கள் சுரேஷ்குமார், சக்கரவர்த்தி, பேத்திகள் ரிஸ்வானா, சுந்தரி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் இமானுவேல் சேகரனாரின் சொந்த ஊரான செல்லூர் கிராமத்தினர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி கிராம தலைவர் மலைராஜ்  ஆகியோர் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் இதனை தொடர்ந்து அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் முனியசாமி  தலைமையில்,  வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர்மானாமதுரை எம்.எல்.ஏ.,நாகராஜன்,  சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா,முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், ஆணிமுத்து,ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புச்சாமி, நாகநாதன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ராஜேந்திரன். அதிமுக பிரதிநிதி ஓவியர் சரவணன், மடந்தை பாண்டி, பாம்புவிழுந்தான் அண்ணா தொழிற்சங்கம் திருமுருகன்,  பேரையூர் ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு ,அச்சங்குளம் ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி கமலராஜன், மேலாய்க்குடி இந்திரன்,  அபிராமம் பிரபு, ஒன்றிய மாணவரணி முத்துக்குமார்,  ராம்நகர் ஜெகதீசன்  உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *