அரசின் மின் கட்டண குளறுபடிகள் கண்டித்து பரமக்குடியில்  திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி  அறவழி போராட்டம் .

அரசின் மின் கட்டண குளறுபடிகள் கண்டித்து பரமக்குடியில்  திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி  அறவழி போராட்டம்
தமிழக அரசின் மின் கட்டண குளறுபடியை  கண்டித்து பரமக்குடி பகுதியில்  கருப்புக்கொடி ஏற்றி திமுகவினர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையால், வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை பயன்படுத்திக்கொண்டு, தமிழக அரசின் மின்சாரத்துறை மின்கட்டணத்தை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் குளறுபடிகளை செய்துவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் மின் கட்டண  குளறுபடிகளை கண்டித்து, தமிழக திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒவ்வொருவரும் தங்களது வீட்டிற்கு முன்பு , சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து ஆளூம்  அரசின் மின்கட்டண குளறுபடியை கண்டித்து  கருப்புக் கொடி ஏற்றி, அரசுக்கு எதிராக  கோஷமிட்டு அறப்போராட்டம் செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.இதனையொட்டி பரமக்குடியில் முன்னாள் வீட்டுவசதி துறை அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில், மாநில தீர்மான குழு துணைத் தலைவர் சுப.த.திவாகரன் முன்னிலையில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைசாமி ,துணை அமைப்பாளர் ராமபாண்டியன், நகர மாணவரணி செயலாளர் ராமதாஸ், நகர நிர்வாகி சங்கர்.  பகைவென்றி சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் திசைவீரன் தலைமையில், பரமக்குடி நகர செயலாளர் சேது கருணாநிதி,பொதுக்குழு உறுப்பினர் அருளானந்து கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.பரமக்குடி நகர இளைஞரணி சார்பாக நகரச் செயலாளர் சம்பத்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏற்றி மின்கட்டண குளறுபடி க்கு எதிராக கோஷமிட்டனர்,போகலூர் ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் கதிரவன், ஒன்றிய பொருளாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி  தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
போகலூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். போகலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்தியா குணசேகரன் தலைமையில் பொட்டிதட்டி பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.  நயினார்கோவில் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சக்தி தலைமையில் கருப்பு கொடி ஏற்றி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.  பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் தலைமையில் கீழபெருங்கரை கிராமத்தில் கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான திமுகவினர் பாம்பூர் பகுதியில் மின்கட்டணத்தை எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.மாவட்ட கவுன்சிலர் முருகேசன், பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன்,பரமக்குடி உதயநிதி ஸ்டாலின் மன்றத்தை சேர்ந்த துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்பு கொடி ஏற்றி தமிழ் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *