உலகை அச்சுறுத்தும் கொரோனா தமிழகத்தை பார்த்து பயப்படுகிறது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

உலகத்து ஏற்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் தமிழகத்தை பார்த்த அச்சப்படும் வகையில் அரசு நடவடிக்கை கடுமையாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நேற்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்திகளை சந்தித்தார் அப்போது விருதுநகர் மாவட்டத்தில் 19 பேருக்கு மட்டுமே குறைவான பாதிப்பு உள்ளது. இதில் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.
உலகத்தையே அச்சுறுத்தக்கூடிய கொரோனா வைரஸ் தமிழகத்தை பார்த்து அச்சப்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை கடுமையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.மேலும், மருத்துவர்களை பாதுகாக்க முடியாத அரசு எப்படி மக்களை பாதுகாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கூறியதற்கு வைரஸ் பாதித்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் டாக்டர்கள் எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் காரணமாகவே தொற்று ஏற்பட்டது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed