எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்எல்ஏ சாதன் பிரபாகர் மலரஞ்சலி

பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பாக எம்ஜிஆரின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது  திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பரமக்குடி சட்டமன்ற அலுவலகத்திற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் மலர் அஞ்சலி செலுத்தினார்.
பரமக்குடியில் எம்ஜிஆரின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு பஸ்நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு  மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.  சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி கீர்த்திகா முனியசாமி, நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான்  உட்பட கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி தூவி மரியாதை செலுத்தினர் .
அதனைத்தொடர்ந்து கிழக்குப் பகுதியில் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில்  முன்னாள் இளைஞரணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன்  தலைமையில்    எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் நாகநாதன், பரமகுடி நகர செயலாளர் கணேசன்   மாவட்ட மாணவரணி பொருளாளர்  யோக மணிகண்டன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் தினேஷ் உட்பட  நிகழ்ச்சியில் ஒன்றிய மற்றும் நகர கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed