கருத்தனேந்தல் அமுதமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

பரமக்குடி அருகே உள்ள கருத்தனேந்தல்  கிராமத்தில் அமுதமுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள கருத்தனேந்தல் கிராமத்தில் அமுதமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி காலை, மாலை யாக சாலை பூஜைகள் நடந்தது .பின்பு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன.பின்பு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பம் புறப்பாடு நடந்தது. பின்பு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். அப்போது அங்கு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் ,பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ,உள்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *