கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ 25 லட்சம் தொகுதி நிதி எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்

கொரோனா நோய் கிருமி தொற்று தடுப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ. 25 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து,  அதிமுக  மருத்துவரணி துணை செயலாளரும்,ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் கொரோனா நோய் கிருமி தொற்று தடுப்பு நடவடிக்கைகாகவும், மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் ஆய்வகம் அமைக்கவும்,ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்க ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்  தொகுதி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் எம்எல்ஏ மணிகண்டன் சார்பாக   முன்னாள் மகளிர் அணி செயலாளர் கவிதா சசிகுமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *