கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.

அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரி தேர்வில்  இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.எளிய முறையில் இணைப்பு கிடைக்கும் வசதிகளை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உயர்கல்வி பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு  ஆல் பாஸ் அளிக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு  தேர்வு நடத்த. வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.இதனால், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் மூலம் இறுதியாண்டு இளங்கலை  மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில், அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 2 மாதிரித் தேர்வுகளும், இறுதியில் 21 ஆம் தேதி முதல் பருவ தேர்வுகளும் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றது.இதன் அடிப்படையில், அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களுக்கு  நேற்று,  ஆன்லைனில் மாதிரி  தேர்வுகள் நடத்துவதற்காக அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது.  பல்கலைக் கழக இணையத்தள முகவரியில் சென்று இணைப்பு பெற்று  காலை  9 மணி முதல் 10 மணி வரை கேள்வித்தாள்களை பதிவேற்றம் செய்து 10 முதல் 1 மணி வரை தேர்வு எழுதி, 1 மணி முதல் 2 மணி வரை விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.ஆனால், நேற்று நடைபெற்ற ஆன்லைன் மாதிரி தேர்வில் பெரும்பாலான மாணவர்களுக்கு இணைப்பு கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு  செய்தாலும், தவறுதலாக பல்கலைக்கழகம் பதிவு செய்ததால் பல மாணவர்களுக்கு இணைப்பு கிடைக்காமல் பரிதவித்து வந்தனர்.  மாணவர்களுக்கு இணைப்பு கிடைக்காததால் , கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்களிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்துள்ளனர். முதல் மாதிரி தேர்வில் இணைப்பு கிடைக்காததால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை பகுதியில் உள்ள இணைப்பு கல்லூரி மாணவர்கள் எளிதாக இணைப்பு பெறுவதற்கு  தேவையான வசதிகளை  பல்கலைக்கழகம் வகுக்க வேண்டும், என மாணவர்கள் தரப்பில் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *