கல்லூரி இறுதி  மாணவர்களின் பருவ தேர்வையும்  ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை

கல்லூரி இறுதி  மாணவர்களின் பருவ தேர்வையும்  ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை.

தமிழக அரசு உயர் கல்வி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு  மாணவர்களுக்கான பருவத்தேர்வுரத்து செய்ததை போல் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு யூஜிசி மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில், கலை கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி முதல், இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்வதுடன், இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவ தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கலை கல்லூரி, பாலிடெக்னிக், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள  முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு ரத்து செய்து செய்வதாக வெளியிட்டுள்ளது. அதேவேளையில்,  இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவதேர்வை  ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பருவத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடாததால், தேர்வு  நடைபெறுமா என்ற கேள்வி  நீடித்து வருவதால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
 இதுகுறித்து அரசு கல்லூரி மாணவர் அக்ரம்சாகித் கூகையில்,
,முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களை பருவத்தேர்வு ரத்துசெய்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், தொடர்ந்து கல்லூரிக்கு செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. கலை பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பருவத் தேர்வு ரத்து செய்வதால் செய்முறை தேர்வுக்கான அனுபவம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு கலைக் கல்லூரி வணிகவியல் துறை தலைவர்
முனைவர் கண்ணன் கூறுகையில்”
மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வு ரத்து  செய்தால் கொரோனா தொற்றிலிருந்து நூறு சதவீதம் காக்க முடியும். கல்லூரி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யலாம்.இதனால் மேல்படிப்புக்கு செல்வதற்கான   காலதாமதத்தை தடுக்கலாம்.  தமிழக முதல்வர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவத்தேர்வை ரத்து செய்ய செய்யலாம்.
 இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறுகையில்”  மூன்று மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வு ரத்து செய்ய வேண்டும். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுதும் போது கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. கல்லூரிகளில் தேர்வு எழுதுபவர்கள் சமூக இடைவேளை கடைப்பிடித்தாலும், போக்குவரத்து மூலம் தொற்று பரவுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. அதேபோல், மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் பருவ தேர்வு ரத்து செய்வது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் தமிழக அரசு அறிவிக்காதது மருத்துவ படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பருவ தேர்வு குறித்து சரியான முடிவுகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
சென.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed