கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழைகளுக்கு புத்தாடை

பரமக்குடி அலங்கார மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ்யொட்டி ஏழைகளுக்கு பொன்னாடை வழங்கப்பட்டது .
பரமக்குடி அலங்கார மாதா ஆலயத்தில் ,கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி  வின்சென்ட் தெ-பவுல் சபை சார்பாக மதநல்லிணக்க விழா நடைபெற்றது.  பரமக்குடி பங்குத்தந்தை மற்றும் வட்டார அதிபருமான திரவியம் தலைமை வகித்தார்.  இந்த விழாவில் விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள்  மற்றும் ஏழை  எளிய மக்களுக்கு புத்தாடை, இனிப்புகளும்   வழங்கப்பட்டது.
 ஏழை எளியோருக்கு  நிதி உதவி  செய்த உபகாரி களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், வின்சென்ட் தெ-பவுல் சபை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .இறுதியில் வின்சென்ட் தெ பவுல் சபையின் செயலாளர் பவுல் ஆசிரியர் நன்றி கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed