கொரோனா ஊரடங்கால் தொழில் இன்றி தவிக்கும் திரைப்பட மேடை நடன கலைஞர்கள் – நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை.

கொரோனா ஊரடங்கால் தொழில் இன்றி தவிக்கும் மேடை நடன கலைஞர்கள் – நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை.

கொரோனா ஊரடங்கால் தொழில் இன்றி தவிக்கும் மேடை நடன கலைஞர்கள் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் மேடை நடன கலைஞர்கள் மற்றும் கிராமிய கலைஞர்கள் சங்கச் செயலாளர் செய்யது கூறியதாவது :-

திரைப்பட மேடை நடன கலைஞர்கள் மற்றும் கிராமிய கலைஞர்கள் பரமக்குடி உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கோவில் திருவிழாக்கள்,முளைக்கொட்டு திருவிழாக்கள்,விநாயகர் சதுர்த்தி விழா,பூச்சொரிதல் விழா,பால்குட விழா உள்பட பல்வேறு விழாக்களில் மேடை நடனங்கள் நடத்தி குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

திருவிழா காலம் தொடங்கி நடந்து வரும் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருந்து வருவதால் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளன.இதனால் நடன நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பத்தோடு மிகவும் கஷ்டநிலைக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே தற்போது வறுமையில் வாடும் மேடை நடன கலைஞர்கள் மற்றும் கிராமிய கலைஞர்கள் குடும்ப நலன் கருதி தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *