கோரிக்கையை ஏற்காத அரசியல் கட்சிகள். சட்டமன்ற தேர்தலில் பெரும் விளைவுகளை சந்திக்கும்.  ஜான்பாண்டியன் பேச்சு.

 தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரும் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் விளைவுகளை சந்திக்கும் என இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 63 வது நினைவு நாளில்  அஞ்சலுத்திய  தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- பட்டியல் இனத்தில் உள்ள  பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என,  மாநில மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 310 நாட்களாக கருஞ்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். தொடர்ந்து தமிழகம் முழுவதும் எங்கள் கட்சி  சார்பாக  கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், மத்திய மாநில அரசுகள் இதற்கு செவிசாய்க்காமல் உள்ளனர். வரும் சட்டமன்ற  தேர்தலுக்கு முன்பாக எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். வரும் சட்டமன்ற தேர்தலில்  கோரிக்கையை ஏற்கும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் அரசியல் கட்சிகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் விளைவுகளை சந்திக்கும் என ஜான்பாண்டியன் கூறினார்.உடன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *