சாலையில் கிடந்த சான்றிதழ்களை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்கள், குவியும் பாராட்டுக்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய தலைமைக் காவலராக இருப்பவர் ஆனந்தகுமார். நேற்று  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.பரமக்குடி பேருந்து நிலையத்தில் ரோந்து சென்றபோது  கீழே கிடந்த பள்ளிச் சான்றிதழ்களை எடுத்துள்ளார்.இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு  சான்றிதழ் பற்றிய விவரங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதில்,சான்றிதழ்கள் பத்திரமாக பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் உள்ளதால்,  உரிய நபர் காவல் நிலையத்திற்கு வந்து சான்றிதழ்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தார். இந்நிலையில், அபிராமம் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வியின் சான்றிதழ் என தெரிந்தது . அன்புச்செல்வி மற்றும் அவர் குடும்பத்தினர் உறவினர்கள் மேற்கு வங்காளத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், இவர்கள் அனைவரும் கொரோனா நடவடிக்கையாக  கமுதக்குடி கற்பக விநாயகர்  பி.எட்.,கல்லூரியில்  தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். இந்த நிலையில், அன்புச்செல்வி மற்றும் அவருடைய தந்தை ஆகிய இருவருக்கும் கொரோனா தோற்று உறுதியானதால், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்,   உறவினர்கள சொந்த ஊருக்கு திரும்பியதால் தனது சான்றிதழ்களை அவர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் அன்புச்செல்வியின் சான்றிதழ்களை விட்டு சென்றதாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து   பரமக்குடி தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் (HC 439) மற்றும் ஆனந்தக்குமார் (Gr I 1908) ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்புசெல்வியிடம் சான்றிதழ்களை ஒப்படைத்தார்கள். உரியவர்களிடம் சான்றிதழ்களை ஒப்படைப்பதற்காக சீரிய முயற்சிகளை மேற்கொண்ட காவலர்கள் இருவருக்கும் மாணவியின் குடும்பத்தினர்,சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பொதுமக்களும்  பாராட்டு தெரிவித்துள்ளனர் .

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *