சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குனர் பாரதிராஜா தனிமைப் படுத்தப் பட்டார்

சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குனர் பாரதிராஜா தனிமைப் படுத்தப்பபட்டுள்ளார்

பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி.,க்கு நேற்று முன்தினம் வந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாரதிராஜாவின் சளி, ரத்த மாதிரிகள் தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார துறை சேகரித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் தொடர்ந்து 14 நாட்கள் பாரதிராஜா தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை தெரிவித்ததின் அடிப்படையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் பாரதிராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed