செல்போன் வாங்குவது போல் நடித்து திருடி செல்லும் இளைஞர் – சிசிடிவி காட்சிகள்.பரமக்குடியில் பரபரப்பு

பரமக்குடியில் செல்போன் கடையில் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி ஆர்ச் பகுதியில் ஆப்பிள் என்ற செல்போன்
கடை உள்ளது. நேற்று விற்பனைக்கு கடையில் இருந்து செல்போன்கள் காணமால் போனதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடையில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் கடைக்கு வந்த ஒருவர் கடை ஊழியரிடம் செல்போன் குறித்து கேட்டுக் கொண்டிருந்த போது, யாருக்கும் தெரியாமல் லாவகமாக செல்போனை, பாக்ஸ்சுடன் எடுத்து கையில் மறைத்து கொண்டு வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் இணையத்தளங்களில் வைரலாகி  பரமக்குடி  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டபகலில் செல்போன் திருடியவரை சிசிடிவி காட்சிகளை வைத்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்
——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *