செல்லூர் கிராமத்தில் ரூ 99.60 லட்சம் செலவில் குடிமராமத்துப் பணி தொடக்கம்.

 

பரமக்குடி அருகே செல்லூர் கிராம பொதுப் பணித் துறை கண்மாயில் ரூ 99.60 லட்சம் செலவில் குடிமராமத்துப் பணி தொடங்கியது.

முன்னதாக,இத் திட்டத்தின் கீழ் பாசன விவசாய சங்கம் அமைக்கப்பட்டு விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் இப்பணிகள் நடைபெறுகிறது.இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடி மராமத்து பணி செய்ய விவசாய சங்கத்தினை முறையாக பதிவு செய்யவில்லை என அப்பகுதி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பொதுப் பணித் துறை,வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் துணையுடன் விவசாய சங்கத்தின் சார்பில் பூமிபூஜை செய்து பணியினை தொங்கினர்.இதில் கீழ் கைகை வடிநில கோட்ட உதவி பொறியாளர் சீனிவாசன்,கீழத்தூவல் காவல்துறை ஆய்வாளர் தீபா,

நீர்பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், நீர்பாசன விவசாய சங்க தலைவர் சங்கரபாண்டியன்,துணைத் தலைவர் கண்ணதாசன், செயலாளர் சாகுல் கமீது,துணைச் செயலாளர் அர்ச்சுணன், பொருளாளர் சேதுராமன் மற்றும் கிராம மக்கள்,விவசாயிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு பணியினை தொடங்கினர்.

தொடர்ந்து இக் கண்மாயில் கருவேல மரங்களை அகற்றி புதிய மடை ஒன்று அமைக்கப் படுவதுடன்,கண்மாயை ஆழப்படுத்தி கரைகளை பலப் படுத்தப் படுகிறது.இதன் மூலம் செல்லூர்,புதுப்பட்டணம் 410 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *