டாக்டர் அப்துல்கலாம் பப்ளிக் ஸ்கூல் சார்பில்ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள்.

டாக்டர் அப்துல்கலாம் பப்ளிக் பள்ளி சார்பாக  நலத்திட்ட உதவிகள்
மாவட்டச் செயலாளர் முனியசாமி வழங்கினார்.

பரமக்குடி டாக்டர் அப்துல்கலாம் பப்ளிக் ஸ்கூல் சேர்மனும். நூர் மீரான் அறக்கட்டளையின் தலைவரும். முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் பொருளாளரும். பரமக்குடி மேலப்பள்ளிவாசல் நெசவு மற்றும் சாந்துபட்டரை ஜமாஅத் செயலாளரும். பரமக்குடி ரியல் எஸ்டேட் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் கௌரவ ஆலோசகருமான முகைதீன் முசாபர் அலி என்ற பாபு அவர்கள் தனது சொந்த செலவில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட முடிதிருத்துவோர் மற்றும் ஊனமுற்றோர் விதவைகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளரும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ஏ.முனியசாமி.அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான கீர்த்திகா முனியசாமி.ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம்.ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் எமனேஸ்வரம் முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் கே அப்துல்மாலிக். அதிமுக பிரமுகர் எஸ்.வெள்ளைச்சாமி. சுந்தரராஜ பட்டணம் ஜமாத் நிர்வாகக் குழு உறுப்பினர் அப்துல்லா சேட். தமுமு க நகர தலைவர் எஸ். சேக் அப்துல்லா. மமக நகர செயலாளர் முகமது சஜீத் முன்னாள் செயலாளர் குயின் இபுராம்ஷா. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *