தனியார் மற்றும்  மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம்.மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களிடம் 100% கல்வி கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 100% கட்டணம் செலுத்த  கட்டாயப்படுத்தும் பள்ளிகள்  மீது வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவும் பெறப்படும் புகார்களை பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம்  17-7-20  அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிமன்ற ஆணையை மீறி 100% கட்டணத்தை செலுத்த கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பான புகாரினை  rmdfeescomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். நீதிமன்ற ஆணையை மீறி 100% கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் புகார்களை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்ட மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *