தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்..

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. நகை கடன் வழங்குவது நிறுத்தப்பட்டதால் நடுத்தர ஏழை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகைக்கடை நிறுத்துமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். செல்போன் குறுஞ்செய்தி மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மாநில தலைமை கூட்டுறவு வங்கி. 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர வங்கிகள் 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் வேலை இழந்து வருமானம் இன்றி இருக்கும் நிலையில் தற்போதைய சூழலில் பலரும் நகைகளை அடகு வைத்து செலவை சமாளித்து வருகின்றனர். எந்த காரணமும் இன்றி நகைக்கடன் நிறுத்தப்படுவதால் தனியார் கடைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *