தமிழ்நாட்டில் வேலை  தமிழர்களுக்கே -தாய் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி காந்தி சிலை முன்பு தாய் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பரமக்குடி காந்தி சிலை முன்பு தாய் தமிழர் கட்சியினர், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுருமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எம். பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர்கள் கணேசன்(ராமநாதபுரம்)  ,சேது முனியசாமி(சிவகெங்கை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர் தலைவர் பூவலிங்கம் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்ய தடை செய்ய வேண்டும்,தமிழ் நாட்டு வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷமிட்டனர். பரமக்குடி இளைஞரணி தலைவர் அன்புராஜ்,ஒடுக்கப்பட்டோர் பேரவை தலைவர் சக்திவேல், தமிழ் புலிகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, வெளி மாநிலத்தவர் தமிழகத்தில் பணியாற்றுவதால்  ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினர்கள்.மாவட்ட இளைஞரணி செயலாளர் திருப்பதி நன்றி கூறினார்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *