திமுக முன்னாள் எம்எல்ஏ காதர்பாட்சா நினைவுநாள்.போகலூர் திமுக சார்பில்  அஞ்சலி

திமுக முன்னாள் எம்எல்ஏ காதர்பாட்சா நினைவுநாள்.போகலூர் திமுக சார்பில்  அஞ்சலி

கழகத்தின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் காலை 9.00 மணி அளவில் போகலூர் ஒன்றியம் பொட்டிதட்டி ஊராட்சியில் ஒன்றிய பெருந்தலைவர்  சத்யா குணசேகரன் தலைமையில் காதர்பாட்சா  வெள்ளைச்சாமி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.  கமுதி அருகே உள்ள காதர்பாட்சா வெள்ளைச்சாமி அவர்களின் நினைவிடத்தில் ஒன்றிய  பொருளாளர்  குணசேகரன்  தலைமையில் துணைச் சேர்மன் பூமிநாதன் ,ஒன்றிய கவுன்சிலர் திருமதி.தேன்மொழி பாதாள பைரவர், மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி ,  பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், மஞ்சூர் ஊராட்சிக் கழகச் செயலாளர் செய்யது முகமது, ஊராட்சி பிரதிநிதி காமராஜ், சாத்தையா, மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *