திருவாடி ஸ்ரீ கல்வடி கருப்பனசாமி கோயில் வருடாபிசேகம். 

திருவாடி கிராமத்தில்  ஸ்ரீ  கல்வடி கருப்பனசாமி கோவில் வருடாபிசேகம் மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
பரமக்குடி அருகே உள்ள திருவாடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  ஸ்ரீ கல்வடி கருப்பனசாமி கோவில் உள்ளது.   கிராமத்தின் காவல் தெய்வமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு
நடைபெற்றது. இதையொட்டி நேற்று திருவாடி ஸ்ரீ கல்வடி கருப்பனசாமி கோயில் வருடாபிசேகத்தையொட்டி கருப்பனசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகளும் பூஜையும் நடைபெற்றது. இந்த விழாவில், பரமக்குடி, சத்திரக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த  பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *