தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி புல்வாய்குளம் கிராமத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரி புல்வாய்குளத்தில் உண்ணா விரத போராட்டம்.

முதுகுளத்தூர் தாலுகா புல்வாய்குளம் கிராமத்தில் ஊர் தலைவர் திசைகர்ணன், மாணவர் நல மன்ற நிர்வாகி முத்துக்கண்ணன் ஆகியோர் தலைமையில், பள்ளர், குடும்பர் , காலாடி , வாதிரியர் , தேவேந்திரகுலத்தார் ,பன்னாடி உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் உள்பட ஒவ்வொரு ஊரிலும் முக கவசம், சமூக இடைவெளி கடைபிடித்து 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
எஸ்சி பட்டியலில் இருப்பது அவமானமாக உள்ளது. மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு மத்திய -மாநில அரசுகள் பட்டியல் பிரிவை விட்டு வெளியேற சட்டம் இயற்ற வேண்டும் என்றனர். விரைவில் தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *