தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி அடையாள உண்ணாவிரதத்தை தொடங்கிய தேவேந்திரகுல மக்கள்.

தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது குறித்து  அரசின்  கவனத்தை ஈர்க்கும் பொருட்டு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி 10 ஆயிரம் கிராமங்களில் அடையாள உண்ணாவிரதம் இருக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் தேவேந்திரகுல வேளாளர்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்சி பாகுபாடின்றி அனைத்துகட்சியினர், அமைப்பினர் தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும்.  பட்டியல் இனத்திலிருந்து  வெளியேற்றுவது என்ற நோக்கில் அடையாள உண்ணாவிரதத்தை தொடங்க உள்ளனர்.   நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 200.,க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடையாள உண்ணாவிரதம் நடைபெறும் என தெரிகிறது.    பரமக்குடி தாலுகாவில்   40 கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தனித்தன்மையுடன் வசித்து வருகின்றனர்.மடந்தை பெத்தனேந்தல்,பகைவென்றி, தலைகால், வெங்கட்டன்குறிச்சி உள்ளிட்ட  20 கிராமங்களில் அடையாள உண்ணாவிரதம் இருப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நயினார்கோவில் பகுதியில் ஒன்றியத்தில் தனித்தன்மையுடன் வசித்துவரும் 30 கிராமங்களில், வாணியவல்லம் உட்பட  17 கிராமங்களில் அடையாள உண்ணாவிரதம் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பார்த்திபனூர் பகுதியில் 18 கிராமங்களில் தனித்தன்மையுடன் வசித்துவரும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கள்ளிக்குடி, கொத்தங்குளம், வடக்கூர் கிராமத்தினர் அடையாள உண்ணாவிரத தொடங்கியுள்ளனர்.மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அடையாள உண்ணாவிரத பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  போகலூர் ஒன்றியத்தில் 30 கிராமங்களில் தனித்தன்மையுடன் வசித்துவரும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் அடையாள உண்ணாவிரதத்தை தொடங்க உள்ளனர்.

 அடையாள உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ள தேவேந்திர குல வேளாள மக்கள் கூறுகையில் ” புதிய தமிழகம் கட்சி அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், கட்சி,அமைப்பு பாகுபாடின்றி தேவேந்திரகுல வேளாளர் சமூகம் என்ற பார்வையில் அடையாள உண்ணாவிரதம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *