தொண்டியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை. 3 பேர் கைது.

தொண்டியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிபகுதியில் இரு சக்கர வாகனத்தை கொண்டு கஞ்சா விற்பனை செய்வதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகார் அலைபேசி எண்ணுக்கு தகவல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன் திருவாடனை தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையிலான இரண்டு தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களை பிடிக்கச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். சினிமா பாணியில் விரட்டிச் சென்று குருந்தங்குடி சூர்யா (19),கன்னிக்குடி சந்தோஷ்குமார்(22) ஆகிய இருவரையும் போலீசார் வளைத்து பிடித்தனர். இவரிடம் விசாரணை செய்ததில் தேவகோட்டை சீ.கூரணி அருண்குமார் (22) என்பவரிடம் மொத்தமாக கஞ்சா வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்தனர், இதனைத்தொடர்ந்து போலீசார் அருண்குமாரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *