நயினார்கோவில் ஒன்றியத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமமுக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்

நயினார்கோவில் ஒன்றியத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமமுக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்
 தமிழகத்தில் பள்ளர் ,குடும்பர் உள்ளிட்ட 7 உட்பிரிவு ஜாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடந்த 300, நாட்களாக கருஞ்சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நயினார்கோவில்  ஒன்றிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நயினார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,  ஒன்றிய செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அரவிந்த் பாண்டியன், ஒன்றிய தலைவர் ஞானவேல் சேகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோபி, ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்குமார், ஒன்றிய தலைவர் செல்லத்துரை, ஒன்றிய தொண்டரணி செயலாளர் அன்பழகன்,நயினார்கோவில் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும்  இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *