நயினார்கோவில் ஒன்றியத்தில் 1.78 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் எம்எல்ஏ சதன் பிரபாகர் தொடங்கி வைத்தார்

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப் பணித்துறையின் கீழ் 7 கண்மாய்கள் அமைந்துள்ளன. இதன் முதற்கட்டமாக குடி மராமத்து திட்டத்தின் கீழ் குளத்தூர் கண்மாய் ரூ 80.00 லட்சம் செலவிலும், சிறுவயல் கண்மாய் ரூ 99.98 லட்சம் செலவிலும் புணரமைப்பு பணியினை பரமக்குடி எம்.எல்.ஏ – என்.சதன் பிரபாகர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வினிதா, அ.தி.மு.க.ஒன்றியச் செயலாளர் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் வரவேற்றார்.

மாவட்ட இலக்கிய அணி தலைவர் நல்லதம்பி,பரமக்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சுப்பிரமணியன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் துரை வினோத்,நயினார்கோவில் ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் தேத்தாங்கால் பூமிநாதன், பரமக்குடி பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் கார்த்திக் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பி.கொடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் நாகசாமி தலைமையில் 20 பேர், எம்.எல்.ஏ.சதன் பிரபாகர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *