பயிர் வளர்ச்சியை அதிகப்படுத்தும் மண்புழு குளியல் நீர்.விதை பரிசோதனை அலுவலர் தகவல்.

அங்கக  வேளாண்மையில் மண்புழு குளியல் நீர்முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒருங்கிணைந்த ஊட்ட மேலாண்மையில் சிறந்த தெளிப்பு உயிர் உரமாகப் பயன்படுகிறது. மண்புழு உரமும் குளியல் நீரும் பயிரின் வளா்களால்
 உறிஞ்சி பயிரின் எல்லாப்
பாகங்களுக்கும் கிடைக்கும். மண்புழு குளியல் நீர் என்பது மண்புழு உடலின் மேற்புறத்தில் உள்ள நுண் துளைகளில் இருந்து சுரக்கும் மியூகஸ் என்னும் திரவமாகும். சிறிய துாண்டுதலால் அதாவது
மண்புழுக்களைக் குளிர்ந்த நிலைக்கோ அல்லது வெதுவெதுப்பான நிலைக்கோ கொண்டுவரும் போது இத்துளைகள்
மூலம் மியூகஸ் திரவம் அதிகளவில் சுரக்கும்.
மண் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் பேரலின் அடியில் துளையிட்டு அதன் வழியே அரையடி நீளமுள்ள பிவிசி குழாயுடன் இணைந்த குழாயை இணைக்க வேண்டும். பேரலின் அடிப்பகுதியில் மணல், சிறு
கூழாங்கற்கள், சிறு செங்கற்களால் 5-15 செ.மீ. உயரம் வரை நிரப்ப வேண்டும். இதன் மேல் இரண்டாம் அடுக்கில் மண் அல்லது மணல் கம்போஸ்ட்டை 15 செ.மீ.க்கு இட வேண்டும். மூன்றாம் அடுக்கில் மட்கிய
கழிவு மற்றும் எருவை 15 செ.மீ.க்கு நிரப்ப வேண்டும். நான்காம் அடுக்கில் 250-300 மண்புழுக்களை விட்டு இவற்றின் மேல் மீண்டும் மட்கிய கழிவு மற்றும் எருவை 15 செ.மீ.க்கு நிரப்ப வேண்டும். கடைசி அடுக்கில் மணல் மற்றும் கம்போஸ்ட்டை 15 செ.மீ இட வேண்டும். பேரலின் வாய்வழியாக வெதுவெதுப்பான நீரைச் சொட்டுச்
சொட்டாக விட வேண்டும். இதற்கு 5-10 லிட்டா் பாத்திரத்தின் அடியில் சிறய துளையிட்டு நீரை நிரப்பி
பேரலின் வாய்ப்பகுதிக்கு மேலே கட்டித் தொங்கவிடுவதால் பேரலில் விழும் நீர் மண்புழுக்களின் உடலில் படும்போது. அந்தச்
சுரப்பிகள் சுரக்கும் திரவம் மண்புழு குளியல் நீர்.
தழை மணி சாம்பல் சத்து மற்றும் கால்சியம் மக்னீசியம், துத்தநாகம் போன்ற  நுண்சத்துகளும்.  பயிர் வளா்ச்சியைத் துாண்டும், ஆக்ஸின்
சைட்டோகைனின், ஜிப்ரலிக் அமிலம் உள்ளது. வளிமண்டலத் தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசிட்டோபேக்டா, ரைசோபியம் பாஸ்பரசைக் கரைக்கும் பாக்டீரியாக்கள் அடங்கியுள்ளன. என்சைம்கள் பீனால், அமினோ அமிலம், ஹியூமிக் அமிலம் போன்றவையும் உள்ளன. இது பயிர் வளா்ச்சியை துாண்டி புழுக்கள் மற்றும் காய்ப்புத் திறனைக் கூட்டும். நோய் பூச்சித் தாக்குதலை எதிர்க்கும். ஒரு லிட்டா் மண்புழு குளியல் நீர் ஒரு லிட்டா் கோமியம் 10 லிட்டா் நீரைக் கலந்து தெளித்தால் சிறந்த உயிர் பூச்சிக்கொல்லியாகப் பயன்படும். பயறுவகை விதைகளைக் குளியல் நீரில் நோ்த்தி செய்து விதைத்தால்
வோ்முடிச்சுகள் உற்பத்தி துாண்டப்படுவதால் நல்ல விளைச்சலை பெறலாம் என. விதைப் பாிசோதனை அலுவலா் சிங்கார லீனா மற்றும் வேளாண்மை அலுவலா்கள் ஜெயந்திமாலா
மற்றும் முருகேஸ்வரி கேட்டுக் கொள்கிறார்கள்.
செள.திலிப் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *