பரமக்குடியில் அனுமதியின்றி  மணல் அள்ளிவந்த  3 லாரிகளை விரட்டி பிடித்த டிஎஸ்பி. தப்பியோடிய டிரைவர்கள்.ஒருவர் மீது வழக்கு பதிவு. 

பரமக்குடியில் அனுமதியின்றி  மணல் அள்ளிவந்த  3 லாரிகளை விரட்டி பிடித்த டிஎஸ்பி. தப்பியோடிய டிரைவர்கள்.ஒருவர் மீது வழக்கு பதிவு. கமுதக்குடி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மணல் அள்ளிய லாரிகள் கமுதக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் வருவதால், சாலைகள் சேதமடைவதுடன் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதை  உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் பரமக்குடி தாசில்தார்  சேகர் ஆகியோருக்கு மனு அளித்தனர்.

 

இந்த நிலையில், பரமக்குடி டிஎஸ்பி நேற்று இரவு 12 மணிக்கு  வைகை ஆற்று பகுதியில் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மணல் ஏற்றி வந்த மூன்று டிப்பர் லாரிகளை நிறுத்தியுள்ளனர். நிறுத்தாமல் சென்றதால் விரட்டியபோது,   லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் தப்பி ஓடினார்கள். இதில் பிரசாத் என்ற டிரைவர் மட்டும் பிடிபட்டார்.   போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து கமுதக்குடி விஏஓ  சத்தியசீலன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில்  கொடுத்த புகாரின் பேரில், நயினார்கோவில் பகுதியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர்   பிரசாத்( 28 ) மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய இருவரை
தேடிவருகின்றனர். மேலும் ,பரமக்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் லாரிகள் உள்ளே வருவதையும் ஆற்றுப்பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளுவதை தடுப்பதற்காக நடவடிக்கைகள் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *