பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிக்கை.

 

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அனைத்து துறை அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிகளுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும்,144-ன்கீழ் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையிலும், பொது மக்களின் நலன் கருதி இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 11.09.2020
அன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி
செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை..பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு (5 நபர்களுக்கு மிகாமல்) மாவட்ட ஆட்சித்
தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு
அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து
மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்துவதற்கு வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் வர
வேண்டும்.அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சி தலைவர்கள் 07.09.2020 தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்துவதற்காக வருபவர்கள்
கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக கட்டாயம் முகக்கவசம்
அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்தும் மற்றும் அரசு அறிவித்துள்ள
வழிமுறைகளை பின்பற்றியும் மரியாதை செலுத்த வேண்டும். வாடகை வாகனங்கள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில்
வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ்,
வேன்,சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை.வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது.வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக்
கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது. அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களில் மட்டுமே
நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும்.பொது இடங்களில் உருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை.ஒலிபெருக்கி வைத்தல், வெடிபோடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள்
நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை.ஜோதி,முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்களின் வேடமணிந்து
வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.ஊர்வலமாக வருவதற்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *