பரமக்குடியில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

பரமக்குடியில் பி,எட்., கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்று ஏய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
டிசம்பர் 1 ஆம் தேதி உலக ஏய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு மாநில ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நயினார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ஏய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பேரணியை தொடங்கி வைத்தார். காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளில் சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரி சார்பில் 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஏய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கோசமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர், பேரணியின் இறுதியில் ஏய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர்களை ஒதுக்கி வைக்க மாட்டோம், ஏய்ட்ஸ் இல்லாத உலகை உருவாக்க அனைவரும் இணைவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.இந்தப் பேரணியில் கல்லூரி  கே. வி .எஸ். பாண்டியன் ,செயலாளர் முருகானந்தம், பொருளாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பேராசிரியர்களும்,  பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *