பரமக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.

பரமக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
 கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.பரமக்குடியில் 6 நபர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 12 நபர்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதில் பரமக்குடியை சேர்ந்த இருவர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மற்ற 10 நபர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் குடும்பங்கள் தனிமைபடுத்தபட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் வசித்த பரமக்குடி கொல்லம்பட்டறை தெரு, சின்னக்கடை தெரு, பங்களா மேடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகள் தடுப்புகள் வைத்து தடை செய்யபட்ட பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது. இப்பகுதிகளில் வெளிநபர்கள் சென்றுவர தடைவிதிக்கபட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடியில் சித்தரஞ்சன் தெருவை சேர்ந்த இந்திரா,78 மற்றும் வைசிரியர் தெருவை சேர்ந்த வெங்டேஷ்,45 ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் வசிக்கும் தெருக்களில் சுகாதாரதுறை, காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இருவரும் கொரோனா தொற்று சிறப்பு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
———————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *