பரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.

பரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் கொரோனா  தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை

பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகனை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமாக  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில், 2692 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 758 பேர் பரமக்குடி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 53 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர். இந்தநிலையில், பரமக்குடி நகர்ப்பகுதியில் தோற்று படுவேகமாக பரவி வருகிறது. பொதுமக்களிடம் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது இன்னும் முழுமையாக பிின்பற்றபடாததால், பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார  கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்று நோயினை கட்டுப்படுத்தும் விதமாக டிஎஸ்பி வேல்முருகன் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதில்,   பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளான சத்திரக்குடி நயினார்கோவில்,பார்த்திபனூர்  காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கட்டாய படுத்தப்பட்டுள்ளது.மேலும்,  பொது இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு இரவு நேர ரோந்து பணிகள் முடுக்கி விடப்படும் என தெரிவித்துள்ளார். பரமக்குடி சப் டிவிஷன் உட்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு டிஎஸ்பி அனுப்பியுள்ள தகவலில் பொது இடங்களில் சமூக இடைவெளியை பயன்படுத்தாத நபர்கள் மீதும் அதனை நடைமுறைப்படுத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை .இதனை தொடர்ந்து அணைத்து பகுதிகளில போலீசார்  முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாத வியாபாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறையும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *