பரமக்குடியில் தேர்தல் விதிமீறல்களை மீறி சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 3 பேர் கைது

பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி பகுதிகள் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள போது கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
   ராமநாதபுரம் மாவட்டம்   போகலூர் ஒன்றியத்தில்  சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற யிருப்பதை முன்னிட்டு அரசு மது கடைகளுக்கு  அரசு விடுமுறை அளித்துள்ளது.
அந்த விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு    தகவல் கிடைத்து.
இதனைத்தொடர்ந்து சத்திரக்குடி காவல்  நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி, தனி பிரிவு போலிஸார் விஜயகுமார், தலைமை காவலர் செந்தூர் பாண்டி ஆகியோர் , போகலூர்,  சத்திரக்குடி,   புதூர் போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்,இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் விசாரணை நடத்தியபோது,   இரு சக்கர வாகனத்தை கொண்டு மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரியவந்தது .  வட நாடு  லெட்சுமணன்  25, மத்தியனேந்தல் கிராமத்தை  இருதயராஜ்  42, செவ்வூர் கிராமத்தை பாக்கியராஜ் 32ஆகியோரிடம் ரூ.20000 மதிப்பிலான  181 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் . இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *