பரமக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்.

கொரோனா தொற்று பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் மே.3 ம்தேதி வரை ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது.இதைத் தொடர்ந்து, பரமக்குடி நகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் வேந்தோணி பகுதியில் மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் பரமக்குடி – எமனேசுவரம் வைகையாற்றில் வசித்து வரும் குருவிக்கார்கள் என சுமார் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, காய்கறிகள் வழங்கப் பட்டது.

முன்னதாக, பரமக்குடி நகர் ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் சந்தை நாகா ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் நகர் இணைச் செயலாளர் நாகநாதன், துணை செயலாளர் சுதாகர், இளைஞரணி நகர் செயலாளர் முத்துக்குமார்,நகர் செயற்க்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், சரவணன்,மைதீன்,வடிவேல் முருகன் மற்றும் பேராசிரியர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், கொரோனா வைரஸ் அச்சத்தைத் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து பரமக்குடி நகர் ரஜினி மக்கள் மன்றத்தினர் இரண்டாம் முறையாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்.மன்றத்தினர் அனைவரது நலனில் அக்கரையுடன் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.இத் தருணத்தில் அனைத்து மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும்.

மேலும் நடிகர் ரஜினி காந்த் தர்பார் திரைப்படத்தின் மூலம் எங்களை பெருமைப் படுத்தியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் தங்களை பார்க்காத தூரத்தில் இருந்தாலும் தங்களது மக்கள் மன்றத்தின் மூலம் உதவிகள் செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *