பரமக்குடி அம்மா உணவகத்திற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் நிதியுதவி.மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி வழங்கினர்

பரமக்குடி அம்மா உணவகத்தில் பத்து நாட்களுக்கு இலவசமாக மூன்று வேளை உணவு அளிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பாக ரூ.1.20 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
பரமக்குடி பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.இங்கு காலை,மாலை,இரவு ஆகிய 3 வேளைகளிலும் நகராட்சி சார்பில் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப் பட்டு வருகிறது.
தற்போது கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவினால் அங்கு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் 23.04.2020 முதல் மே 3 ம்தேதி வரை அம்மா உணவகத்தில் உணவு அருந்தும் அனைவருக்கும் தினமும் 3 வேளை உணவை இலவசமாக வழங்க ரூ 1.20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகிய இருவரும் நகராட்சி ஆணையாளர் வீர முத்துக்குமாரிடம் வழங்கினர்.
பின்பு அவர்கள் கூறியதாவது :-
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.பரமக்குடி அம்மா உணவகத்தில் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்க ரூ 1.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளோம் என்றனர்.அதுசமயம் நகர் செயலாளர் கணேசன் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *