பரமக்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சதன்பிரபாகர் ஆய்வு

பரமக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு   சிகிச்சை அளிக்கும் நிலையில், கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற புகாரின் அடிப்படையில் பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று  சிறுகச் சிறுக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே, 22 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்த நிலையில் , நேற்று இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி கிறிஸ்துவ தெருவில் வசிக்கும் நகராட்சியில் ஆண்   தற்காலிக துப்புரவு தொழிலாளருக்கு (40 வயது) கொரோனா  உறுதிசெய்யப்பட்டது. இவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்கு அருகில்  கர்ப்பிணி பெண்கள் பிரசவ வார்டு உள்ளதால், அங்கிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு தோற்று பரவி விடும் என்ற அச்சத்தில் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அறிந்த, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் இன்று காலை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வில், தனிமைப்படுத்தப்பட்டும் வார்டை பார்வையிட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளித்து அளிக்க வேண்டும் என மருத்துவரிடம் தெரிவித்தார். பின்னர்,  கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்டு அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம்  கொரோனா வைரைஸை தடுக்க பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.பொது மருத்துவத்திற்கு வரும் நோயாளிகளை அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.  இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் நாகநாதன் உள்பட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.தொடர்ந்து,
காட்டுப் பரமக்குடி மேலத்தெருவில் உள்ள நியாய விலை கடையில் பொருள்  முறையாக விநியோகம் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *