பரமக்குடி அருகே அரசு   வேலை வாங்கி தருவதாக 2 லட்சம் மோசடி. இளைஞருக்கு வலைவீச்சு 

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை(23) ,படித்துவிட்டு வேலையில்லாமல் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில்,  தாளையடிகோட்டையை சேர்ந்தவர் அங்குசாமி மகன் அஜித் ( 23 ) பாண்டித்துரையிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்பணமாக ரூ. 2 லட்சம் பெற்றுள்ளார். மீதமுள்ள பணத்தை வேலை வாங்கி தந்தவுடன் பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பி பாண்டித்துரை அஜித்திம் ரூ.2, லட்சம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து பல  மாதங்கள் ஆன நிலையில். வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் அஜித் . பாண்டித்துரை அஜீத்திடம் சென்று வேலை வாங்கித் தாருங்கள் இல்லை என்றால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் என்று பலமுறை கேட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த அஜித்  பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்ன மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து, பாண்டித்துரை நயினார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் அஜித் மீது வழக்கு பதிவு செய்துள்னர்.   வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரிந்து தப்பி ஓடிய அஜித்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed