பரமக்குடி அருகே புதுமணத்தம்பதிகள் நடும் மரங்கள் முன்மாதிரியாகத் திகழும் கிராமம்.

 பரமக்குடி அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தில்  புதுமணத்தம்பதிகள் மரக்கன்றுகளை நட்டு ஊருக்குள் வருவேண்டும் என்ற வழக்கத்தால் மரம் நடுவதின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்.டும் முன்மாதிரியான கிராமமாக உள்ளது.
பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்டது என்.பெத்தனேந்தல்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவம், காவல்துறை ,உள்பட அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் நல பணிச் சங்கம் என்ற ஒரு அமைப்பை துவங்கியுள்ளனர். அந்த அமைப்பின் மூலம் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தல் ,விளையாட்டு வீரர்களை உருவாக்குதல், மரக்கன்றுகள் நடுதல், பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தல்,உள்ளிட்ட பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர் .அதன்படி அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்களோ, அல்லது பெண்களோ, திருமணம் செய்து ஊருக்கு வரும்பொழுது அந்த புதுமணத் தம்பதிகள் அந்த கிராமத்தில் உள்ள கோயிலை சுற்றிலும் மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.  புதிதாக திருமணம் செய்து வரும் தம்பதிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்துவருகின்றனர். இது ஒருமுன்மாதிரி கிராமங்களாக திகழ்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் சந்திரன் ,செயலாளர் சண்முகவேலு, பொருளாளர் மனோகரன், செயற்குழு உறுப்பினர் சுரேஷ், உள்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்தி வருகின்றனர் .இவர்கள் இந்த செயலை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *