பரமக்குடி அருகே ரூ 15 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் – சதன் பிரபாகர் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

 

பரமக்குடி அருகே வேந்தோணி ஊராட்சிக்குட்பட்ட வி.முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் ரூ 15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உ.திசைவீரன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்தாமணி முத்தையா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேந்தோணி ஊராட்சி மன்றத் தலைவர் குழந்தைராணி துரைராஜ் அனைவரையும் வரவேற்றார்.

 

பரமக்குடி எம்.எல்.ஏ.என்.சதன் பிரபாகர், சுத்திகரிக்கப்பு குடிநீர் வழங்கும் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சுப்பிரமணியன்,ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்திரமோகன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச் செல்வி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் ஏற்பாட்டில் வி.முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் கொரோனா நிவாரணப் பொருட்களான அரிசி,காய்கறிகள் ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ. முனியசாமி,பரமக்குடி எம்.எல்.ஏ. என்.சதன் பிரபாகர் ஆகியோர் வழங்கினர்.