பரமக்குடி அருகே வேந்தோணி கண்மாயில் மீன் ஏலம் அறிவிப்பு. பொதுமக்கள் எதிர்ப்பு

 

பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராம ஊராட்சிக்கு பாத்தியப்பட்ட கண்மாயில் மீன் ஏலம் விடப் போவதாக அறிவிப்பு வெளியானதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேந்தோணி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட கண்மாய் ஆண்டுதோறும் மீன் ஏலம் விடப்பட்டு வருகிறது இதில் வரும் வருமானத்தை கம்மாய் பராமரிப்பு கிராம பணிகளை செய்து வருகின்றனர் மீதமுள்ள பணத்தை கொண்டு தனது அனைத்து சமுதாய மக்களின் வழிபாட்டு தலங்களுக்கு செலவு செய்ய பயன்பட்டது இந்த நிலையில் நேற்று திடீரென தாலுகா அலுவலகத்தில் வேந்தோணி கண்மாயில் உள்ள மீன்களை ஏலம் விடப்போவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது இதை அறிந்த கிராம மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக செல்ல திட்டமிட்டனர் இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர் இதனால் கிராம மக்கள் ஊர் எல்லையில் கூறினார் பிறகு இந்த தகவல் அறிந்து வந்த பரமக்குடி வட்டாட்சியர் செந்தில் வேல் முருகன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் இதனால் கிராம மக்கள் கலைந்து சென்றனர் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள போது கிராம மக்கள் ஒன்றாக கூடியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *