பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தபால் ஓட்டு மறுப்பு. 8 மணி நேரமாக நீடித்த தர்ணா போராட்டம்.

பரமகுடி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் பணிக்கு சென்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 8 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அங்கன்வாடி பணியாளர்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தல் பணிக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

இவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் 15 பெற்று, பணியாற்றக்கூடிய ஒன்றியம் மற்றும் பணிக்கு சென்று இருக்கக்கூடிய ஒன்றியங்களில் தபால் ஓட்டு காண விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது .
30 ஆம் தேதிக்குள் தபால் ஓட்டுகளை விண்ணப்பத்தை பெற்று ஓட்டளிக்க படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் பணிக்கு சென்றதால் தபால் ஓட்டுக்களை பெற்று வாக்களிக்க முடியவில்லை ஆகையால் படிவம் 15 மற்றும் 16 வைத்திருக்கக்கூடிய நபர்களுக்கு தபால் ஓட்டு விண்ணப்பத்தினை அளித்து தபால் ஓட்டு அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து 8 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில்

அரசு ஊழியர்களுக்கு நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்பின் பொழுது விண்ணப்பபடிவம் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் எங்களுக்கு பயிற்சி வகுப்பு இல்லாததால் நாங்கள் விண்ணப்பத்தை பெறமுடியவில்லை. பணிக்குச் சென்று இருக்கக்கூடிய ஒன்றியங்களில் படிவம் 15 மற்றும் 16 கொடுத்தனர் , 31 ஆம் தேதி வாக்குரிமை உள்ள ஒன்றியங்களில் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்ததால். நேற்று
காலை 9 மணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தபால் ஓட்டு காண விண்ணப்பத்தினை பெற வந்தோம். ஆனால், 30 ஆம் தேதி கடைசி நாள் என தபால் ஓட்டுகளை விண்ணப்பத்தை கொடுக்க மறுக்கின்றனர் என தெரிவித்தனர்.
எங்கள் வாக்கு எங்கள் உரிமை என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *