பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு   எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு   எம்.எல்.ஏ. உணவு வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்  சதன் பிரபாகர் கொரோனா தடுப்பு காலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1 கோடி செலவில் இலவச அரிசி, காய்கறிி தொகுப்பு வழங்கினார், மேலும், பொதுமக்களுக்கு கிராமந்தோறும் முகக் கவசங்களை இலவசமாக வழங்கினார். இதன் காரணமாக எம்எல்ஏ, அவரது மகன் மற்றும் உதவியாளருக்கு கொரோனா தோற்று பரவியது. இதனால், ராமநாதபுரம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கி தொடக்கவிழாவில்,  கொரோனா தொற்றில் குணமடைந்த நபர் என்ற அடிப்படையில் முதல் நபராக  பிளாஸ்மா தானம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து வீடு திரும்பிய பரமக்குடி எம்எல்ஏ இன்று தனது பிறந்த நாளை ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார். தனது சொந்த ஊரான பேரையூர் கிராமத்தில் உள்ள காளிி கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பெற்றோரிடம் ஆசிபெற்று கட்சியினரை சந்தித்தார். இதனை தொடர்ந்து, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் தலைமையில் பார்த்திபனூர் மற்றும் கமுதக்குடி அருகே உள்ள முதியோர்  இல்லங்களில் உள்ளவர்களுக்கு எம்.எல்.ஏ சதன் பிரபாகர்  மதிய உணவு வழங்கினார் . ராமநாதபுரத்தில் உள்ளஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று மதிய உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, நயினார்கோவில் ஒன்றியச் செயலாளர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை  பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக் ,நகர் இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார் ,அண்ணா தொழிற்சங்க நிர்வாகி திருமுருகன் ,மாவட்ட ஐ. டி. பிரிவு துணைச் செயலாளர் அம்மா சரவணன்,  அதிமுக நிர்வாகிகள் பேரையூர் முனியசாமி, காந்தி ,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *