பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.

பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம் தொகுதி மக்கள் பெருமை.
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் கொரோனா தொற்று தொடங்கியதும், ,அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியினை தொடங்கினார்.பரமக்குடி  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பகுதியில் ஒருலட்சத்து இருபதாயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி காய்கறி தொகுப்பினை வழங்கி வந்தார். .இந்த நிலையில், பொதுமக்களின் நன்மைக்காக  மூன்று கொரோனா  பரிசோதனை செய்துகொண்டார். தனது உடன் பணியாற்றிய கட்சி நிர்வாகிக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டதால் ,நான்காவது முறையாக ஜுன் 30 ல் எடுத்த பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது, இவருடைய மகன் மற்றும் உதவியாளருக்கும்  தோற்று உறுதியானது.
மற்றவர்களைப்போல் தனியார் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா சிகிச்சை மேற்கொள்ளாமல்  தனது மகனுடனுன் 3 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,கடந்த 9ஆம் தேதி  பரிசோதனையின் முடிவில் எம்எல்ஏ சதன் பிரபாகர், மகன் மற்றும் உதவியாளர்  ஆகியோர்  சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், சில நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் விதமாக தனது சொந்த ஊரான பேரையூரில் உள்ள வீட்டில்  கடந்த 12 தினங்கள்  தனிமை படுத்திக்கொண்டார். இந்தநிலையில் சென்னை சென்ற சதன்பிரபாகர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்தார்.இந்த தகவல் அறிந்த பரமக்குடி தொகுதி மக்கள் அரசியல்வாதி என்பதை காட்டிலும் நாட்டின் சாதாரண குடிமகன் குடிமகன்  என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார் என பெருமைபட பேசி வருகின்றனர். இது, பரமக்குடி தொகுதி மக்களுக்கு பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும்,  தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் குணமடைந்த அனைவரும் பிளாஸ்மா தானம்   செய்ய வேண்டும்.பிளாஸ்மா தானம் செய்த எம்எல்ஏவுக்கு பரமக்குடி தொகுதி மக்கள், அனைத்து  அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், அனைத்து சமூக  சங்கங்கள் தொழில்துறையினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *