பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பெயரளவில் ஆக்கிரமிப்பு அகற்றம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு.

பரமக்குடி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறையினர் பெயரளவில் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையாக இருந்த 75 கிலோ மீட்டர் 2017 ஆம் ஆண்டு ரூ.960 கோடி செலவில் நான்கு வழி சாலையாக மாற்றபட்டது. இதனால், பரமக்குடி நகர் பகுதிக்குள் இருந்த 7  கி.மீ.,தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையாக மாற்றபட்டது.  மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் பல கோடி மதிப்புள்ள இடத்தை  ஆக்கிரமித்துள்ளதாக தொடர்ந்து தினகரன் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ளவர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு  ஒருவாரமாக பொதுமக்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையினரால்  அறிவுறுத்தபட்டது.சிலர் மட்டுமே, ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் இன்று , ஓட்டப்பாலம் பகுதியில் இருந்து கிருஷ்ணா தியேட்டர் வரை 3 கி.மீ., தொலைவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள்  பெயரளவிற்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வருவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, கடைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அறிவுறுத்தல் மட்டுமே செய்யபட்டது. இன்று முழுவதும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஒரே ஒரு மரகிளையை மட்டும் அகற்றினர். மினிலாரி மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பெயரளவுக்கு மட்டும் நடந்ததால், பரமக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அவல நிலை தொடர்கதையாக உள்ளது. எனவே முறையாக சர்வே செய்து சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் பாதுகாப்புடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
செள.திலிப்
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *