பரமக்குடி பகுதிகளில்  தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம் .

பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி நகர்  மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர்  பள்ளர், குடும்பர் , காலாடி , வாதிரியர் , தேவேந்திரகுலத்தார் ,பன்னாடி உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.காட்டுபரமக்குடியில் கிராமத் தலைவர் கருப்பையா, வழக்கறிஞர் குழந்தைவேலு ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போகலூர் ஒன்றியத்தில் புத்தூர் மென்னந்தி குமுக்கோட்டை, முதலூர் கருத்தனேந்தல், எஸ் கொடிக்குளம் செய்யாலூர் உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நயினார்கோவில் ஒன்றியத்தில் குளத்தூர், வாணிய வல்லம், மும்முடிசாத்தான், இல்லிமுள்ளி, கிளியூர் துரத்தியோந்தல், பெருங்களூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பார்த்திபனூர் பகுதியில் கள்ளிக்குடி கொத்தங்குளம் வடக்கூர் தேவன் ஏரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பரமக்குடி ஒன்றியத்தில் மஞ்சூர் பெத்த நந்தல் தலை கால் மடந்தை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் உள்பட ஒவ்வொரு ஊரிலும் முக கவசம், சமூக  இடைவெளி கடைபிடித்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *