பல்கலைக்கழக அளவிலான நடைபெற்ற பேச்சு போட்டியில் அரசு கல்லூரி மாணவி முதலிடம்

அழகப்பா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பரமக்குடி அரசு கல்லூரி மாணவி முதலிடம் .முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவினையொட்டி,கட்டுரை, சிறுகதை, மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது .இந்த போட்டிகளில் அழகப்பா பல்கலைக்கழகதின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். பரமக்குடி அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி காயத்திரி பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசினைப் பெற்றார். இவருக்கு ரூ.1500 ரொக்க பரிசுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டது.முதலிடம் பெற்ற மாணவிக்கு தமிழ் துறை சார்பாக கல்லூரி முதல்வர் முதல்வர் பூரணச்சந்திரன் தலைமையில்,தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மணிமாறன் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.முதலிடம் பெற்ற மாணவியை துறைத் தலைவர்கள் சிவக்குமார், கண்ணன், மணிமாலா, ரேணுகா தேவி, ஆஷா செந்தில்குமார், விஜயகுமார் ஆகிய பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *