பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றத்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

பல்கலைக்கழக நிர்வாகம் பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றப்பட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்…!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 27வது பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மாணவர்கள் அனைவருக்கும் இந்திய மாணவர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. சாதி, மதம், மொழி, இன பாகுபாடுகளைக் கடந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். அதேபோல் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்திலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல்கலைக்கழக மாணவர் பேரவை மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக 27 வது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த குடியரசு தலைவர் பங்கேற்கும் விழாவை புறக்கணிக்க கோரி புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவையும், இந்திய மாணவர் சங்கமும் அறைகூவல் விடுத்திருந்தது. அதனை ஏற்று புதுச்சேரியை சேர்ந்த மானுடவியல் ஆராய்ச்சி மாணவி மேகலா, *புதுச்சேரி வில்லியனூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மகளிர் கல்லூரியை சேர்ந்த சமூக பணி துறையில் தங்கப்பதக்கம் வென்ற சமீரா அன்வர்*, கேரளாவை சேர்ந்த ஊடகவியல் துறையில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி கார்த்திகா குரூப், சென்னையை சேர்ந்த மானுடவியல் துறையை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் அருண் குமார் ஆகியோர் போராடும் மக்கள் பக்கம் நிற்பதாகவும், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் பங்கேற்க போவதில்லை என அறிவித்தனர்.

மேலும் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது கேரளாவை சேர்ந்த ரபீஹா என்ற மாணவியை குடியரசு தலைவர் விழாவிற்கு வந்த பிறகு காரணம் எதுவும் கூறாமல் வெளியேற்றப்பட்டு குடியரசு தலைவர் சென்ற பிறகு மீண்டும் பட்டமளிப்பு விழா அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்விதமான காரணமுமின்றி தங்கப்பதக்கம் வென்ற மாணவியை வெளியேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புதுச்சேரி மாநிலத்தில் கல்வி பயின்று, தங்கப்பதக்கம் வென்ற மாணவியை அரங்கத்திலிருந்து வெளியேற்றியது புதுச்சேரி மாநிலத்திற்கு அவமதிப்பாகும். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் இச்சம்பவத்திற்கு உரிய விளக்கமும், பாதிக்கப்பட்ட மாணவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு வலியுறுத்துகிறது.

இச்சம்பவங்களுக்கு பிறகும் மீண்டும் பட்டமளிப்பு விழா அரங்கிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட மாணவி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மற்றும் நாட்டு மக்களுடன் நிற்பதால் பல்கலைக்கழக கலாச்சார இயக்குனர் ராஜிவ் ஜெயினிடம் இருந்து தங்கப்பதக்கத்தை பெறாமல் எதிர்ப்பை பதிவு செய்ததையும் அதேபோல் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கீகாரமான குடியரசுத் தலைவர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவினை புறக்கணித்த அனைத்து மாணவர்களுக்கும் இந்திய மாணவர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *