பார்த்திபனூர் செக்போஸ்டில் சோதனை….போலி வாகன அனுமதி அட்டை13 பேர் மீது வழக்குப்பதிவு 2 கார்கள் பறிமுதல்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூர் காவல்துறை சோதனைச் சாவடியில் இனோவா, டவேரா காரில் 2 பெண்கள் உள்பட 12 பேர் வந்துள்ளனர்.பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், இரு கார்களையும் நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிகமானவர்கள் பயணம் செய்து வந்ததை கண்டறிந்து விசாரனை நடத்தினர். விசாரனையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து சென்னை சென்று வருவதாக கூறி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாங்கியதாக இரு அனுமதி அட்டைகளை காண்பித்தனர்.

அதில் எழுதப்பட்ட பெயர் விபரங்கள், அனுமதி அட்டை வழங்கிய அலுவலர் கையெழுத்து தெளிவாக இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த பணியில் இருந்த போலீசார் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்களை தொடர்பு கொண்டு கார்களின் அனுமதி அட்டைகள் குறித்து விபரம் கேட்டுள்ளனர். அப்போதுஇரு கார்களின் அனுமதி அட்டைகளும் போலியானது என தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து பரமக்குடி தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 கார்களை பறிமுதல் செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *