பாலியல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ.உள்பட 4 பேர் கைது!

மேற்கு வங்க மாநில பெண்ணை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து தஞ்சாவூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தியதாக ‘பணியிடை நீக்கம்; செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் நடராஜபுரம் காலனியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளிகளான செந்தில்குமார் (49), அவரது மனைவி ராஜம்(49), இவர்களது கூட்டாளிகளான பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில், பிரபாகரன் என்பவர் லஞ்ச வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது..

தஞ்சாவூர்-திருச்சி புதிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி- சானூரபட்டி பிரிவு அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் அந்தோரா  ஜுன் 1-ம் தேதி நண்பகல் 1 மணியளவில் உடலில் காயங்களுடன் சாலையில் கிடந்தார். அப்போது அவ்விடத்துக்கு சற்று தொலைவில,; கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூ 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட   கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் அப்பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், 27 வயதான அந்தோரா தான் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் பிறந்ததவர் என்றும், பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களுரில் பெற்றோருடன் வசித்து வருவதுதாகவும் தெரிவித்தார்.
பெங்களுரில் உள்ள தனது சித்தி மகள் சாந்தா என்பவர் மூலம் ஒருவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு அழைத்துவந்து தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் ‘வீட்டு வேலைக்கு’ எனக்கூறி சேர்த்துவிட்டதாகவும், ஆனால் அங்கே இருந்தவர்கள் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அப்பெண் கூறினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், தன்னை  பெங்களுருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியதாலும் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் உள்ளிட்ட நான்குபேர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதுடன் ஒரு வாகனத்தில் அழைத்துவந்து சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டதாகவும் அந்தோரா கூறினார்.
இதையடுத்து, தஞ்சை சரக போலீஸ் டிஐஜி லோகநாதன் உத்தரவின்பேரில், போலீஸார் தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர். அந்தோரா கூறிய தகவல்கள் மற்றும் வாகனத்தின் நிறம் அடிப்படையில், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்திவருவபர் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து செந்தில்குமார் அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட நான்குபேர் மீது வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக இருந்த அவர்கள் நால்வரையும் தேடிவந்தனர்.

இந்நிலையில், நடராஜபுரம் காலனியில் ஒரு வீட்டில் தலைமறைவாக பதுங்கியிருந்த இருந்த முக்கிய குற்றவாளியான செந்தில்குமார் (49);, அவரது மனைவி ராஜம் (49), பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதாகியுள்ள பிரபாகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல்நிலையத்தில் பணிபுரிகையில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கையும் களவுமாக பிடிபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *